சினேகா- பிரசன்னா மகளின் க்யூட் வீடியோ!

  • July 31, 2020 / 07:46 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் பிரபலமான நடிகர் பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே விகான் என்று ஒரு மகன் இருக்கிறான், சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஒரு மகள் பிறந்தாள்.

தனது மகளின் புகைப்படத்தை தற்போது ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார் நடிகை சினேகா. அதுமட்டுமின்றி குவாரண்டினில் வொர்க்கவுட் செய்ய தொடங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருவதாகவும் அனைவருக்குமே இது கஷ்டமான சமயம்தான் இருப்பினும் நம்மை பாசிட்டிவாக வைத்துக் கொள்ள உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும் இந்த வீடியோவை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

சினேகாவின் மகளுக்கு அத்யந்தா என்று பெயரிட்டுள்ளார்கள். தற்போது சினேகா வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குனரான ஆர்.ஏ கார்த்திக் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் “வான்” எனும் திரைப்படத்தில் சினேகா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.தீனதயாளன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus