இதுவரை யாரும் பார்த்திராத சௌந்தர்யாவின் அரிய புகைப்பட தொகுப்பு!
November 23, 2021 / 12:39 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்தின் ஹீரோவே ‘நவரச நாயகன்’ கார்த்திக் தான். அது தான் ‘பொன்னுமணி’ திரைப்படம். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.வி.உதயக்குமார் இயக்கியிருந்தார்.
‘பொன்னுமணி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை சௌந்தர்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘முத்துகாளை, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, மன்னவரு சின்னவரு, படையப்பா, தவசி, இவன், சொக்கத்தங்கம்’ என தமிழ் மொழி படங்கள் குவிந்தது.
நடிகை சௌந்தர்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. 2004-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் சௌந்தர்யா. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சௌந்தர்யாவின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…