2008 ஆம் ஆண்டு வெளியான “காதலில் விழுந்தேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
காதலில் விழுந்தேன் திரைப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், தெறி, காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, கடைசியாக ஆன்தாலஜி திரைப்படமான சில்லுக்கருப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கிய இவர் சில காலங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டும் வந்தார்.
தற்போது சச்சின் தேவ் இயக்கத்தில் “எரியும் கண்ணாடி” மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “ட்ரிப்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.