அடேங்கப்பா… நடிகை டாப்சியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்சி பன்னு. 2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சி பன்னுக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். ‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட்.

அவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி’ என தமிழ் படங்கள் குவிந்தது. டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

இப்போது நடிகை டாப்சி பன்னு நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்களும், ஹிந்தி மொழியில் நான்கு படங்களும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை டாப்சி பன்னுவின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.