தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி பன்னுக்கு இன்று (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) பிறந்த நாளாம். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெறுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், அதை செய்து காட்டியவர் நடிகை டாப்சி.
2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சிக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘யாத்தே யாத்தே’ மற்றும் ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’ ஆகிய பாடல்களின் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. அப்பாடல்கள் மூலம் தான் அதிக கவனம் ஈர்த்தார் நடிகை டாப்சி பன்னு
‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர்’ என படங்கள் குவிந்தது. டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். தற்போது, டாப்சி நடிப்பில் தமிழில் ஒரு படமும், ஹிந்தியில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை டாப்சி பன்னுவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

