என் சந்தோஷம் இங்க தான் இருக்கு – தமன்னா

  • October 19, 2022 / 11:03 PM IST

2006-ஆம் ஆண்டு வெளியான கேடி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா . அதன் பிறகு வியாபாரி , கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் . அதன் பிறகு படிக்காதவன் , அயன் ,பையா போன்ற வெற்றி படங்களில் நடித்து இருந்தார் .

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார் தமன்னா . இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமான பாகுபலி படத்திலும் இவர் நடித்து இருந்தார் . பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமேஸ் , உள்ளிட்ட சில படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை .

தமிழில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் . இந்நிலையில் திருமணம் குறித்து தமன்னா பேசி உள்ளார் . தமன்னா அளித்துள்ள பேட்டியில், ”எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது. ஆனால் தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் . நடிப்புத் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். பிஸி காரணமாக சில முறை எனது பெற்றோரிடம்கூட தொலைபேசியில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார் தமன்னா .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus