மீண்டும் வொர்க்கவுட் செய்ய தொடங்கிய நடிகை தமன்னா!

2006 ஆம் ஆண்டு ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “கேடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் தமன்னா. தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் இந்த அழகுப் பதுமை சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சரியாகி வீடு திரும்பியுள்ளார்.

அதனால் தனது அன்றாட வேலைகளை மீண்டும் செய்ய தொடங்கியதாகவும் தற்போது மீண்டும் வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது யோகா செய்து வந்ததாகவும், ஆனால் இது கடுமையான உடற்பயிற்சி என்பதால் மெதுவாக ஆரம்பித்து பின்பு மீண்டும் முன்புபோல் வொர்க்கவுட் செய்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கொரோனா சிகிச்சை முடிந்து இவர் வீடு திரும்பியதை ஒரு வீடியோவாக வெளியிட்டு அவரது மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் மீண்டும் பிட்னஸில் குதித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை தமன்னா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

Share.