மாலத்தீவு பக்கம் உல்லாச சுற்றுலா சென்றுள்ள நடிகை டாப்ஸி!

  • October 7, 2020 / 08:30 PM IST

2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு.

“ஆடுகளம்” படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் போன்ற தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது “ஜன கன மன” என்ற படத்தில் நடித்து வரும் இந்த அழகுப் பதுமை நல்ல நடிகை மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட.

சமீபத்தில் மிகவும் ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தி அதில் வரும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகை டாப்ஸி, தற்போது தனது நண்பர்களுடன் மாலத்தீவிற்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார்.

நயன்தாரா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபல நடிகைகள் கோவா சென்றுள்ள நிலையில் இவர் தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus