ஜெயம்ரவியுடன் இணையும் நடிகை !

  • April 25, 2022 / 03:57 PM IST

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன் . இந்த படத்தை இயக்கி இருந்தார் நெல்சன் திலீப்குமார் . நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகனின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து இருந்தார் .

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் அடுத்து படத்தின் செய்தி வெளியாக இருக்கிறது .
M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வணக்கம் டா மாப்பிள்ளை . இயக்குனர் M.ராஜேஷ் இயக்கிய வணக்கம் டா மாப்பிள்ளை , மிஸ்டர் லோக்கல் , கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . மேலும் ஜன கண மண என்ற படத்தில் நடித்து இருக்கிறார் . இதனை தொடர்ந்து அகிலன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம் ரவி .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus