தன் ரசிகரின் ஆர்ட் வொர்க் பார்த்து நெகிழ்ந்த திரிஷா!

  • September 21, 2020 / 12:13 PM IST

சி.பிரேம் குமார் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற படம் ’96. இந்த படத்தில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடிகை திரிஷா நடித்திருப்பார்.

கோவிந்த் மேனன் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் இந்த படத்தின் காட்சிகளை மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார்கள்.

96 வது வருடம் நிகழும் நிறைவேறாத காதல் கதையை மையமாக கொண்ட இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் ரசித்து இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பை அளித்தனர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தில் வரும் தன் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் வரைந்து திரிஷாவிற்கு பரிசாக அளித்துள்ளதை இவர் ஷேர் செய்து மிகவும் மனம் நெகிழ்ந்து அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/trishtrashers/status/1307235077630226432?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus