நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • May 4, 2023 / 08:27 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஆரம்பத்தில் ‘ஜோடி’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே வந்து சென்றார். அதன் பிறகு ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் த்ரிஷா. இதில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் த்ரிஷா.

‘மௌனம் பேசியதே’ ஹிட்டிற்கு பிறகு த்ரிஷாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, ராங்கி, பொன்னியின் செல்வன் 1 & 2’ என படங்கள் குவிந்தது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் த்ரிஷா. இப்போது த்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை, சுகர், ராம், லியோ, தி ரோட், சதுரங்க வேட்டை 2’ என ஆறு படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (மே 4-ஆம் தேதி) த்ரிஷாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus