நடிகை திரிஷாவின் முதல் சம்பளம் என்ன தெரியுமா?

  • September 16, 2020 / 06:30 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் நட்சத்திர நடிகையாக தமிழ் திரையுலகில் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் திரிஷாவுக்கு நடிப்பு பயணம் சிம்ரன் மற்றும் பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜோடி” படத்தின் மூலம் தொடங்கியது. இந்த படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார் நடிகை திரிஷா.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான “மௌனம் பேசியதே” படத்தில் அவருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து அன்றிலிருந்து இன்று வரை ஹீரோயினாக நடித்து வருகிறார்.

1999ஆம் வருடம் வெளியான ஜோடி படத்தில் நடித்தபோது திரிஷாவின் சம்பளம் வெறும் 500 ரூபாய் தானாம். தற்போது நடிகை திரிஷாவின் சம்பளம் 1.5 கோடி. தன் சிறந்த நடிப்பாலும் கடின உழைப்பாலும் 500 ரூபாய் சம்பளத்தில் இருந்து இவ்வளவு தூரம் உயர்ந்த இவரை அவரது ரசிகர்கள் பாராட்டி இந்த செய்தியை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus