“உங்களுக்கு வேற வேலையே இல்லையா” கஸ்தூரியால் கடுப்பான நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
“ஆத்தா உன் கோயிலிலே” திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கஸ்தூரி, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளம், தெலுங்கு,கன்னடம் போன்ற பிறமொழி திரைப்பங்களிலும் நடித்துள்ளார். தனது வசீகர அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த கஸ்தூரி திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு விடுப்பு விட்டுவிட்டு தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார்.
ஆனால் எவ்வளவு நாள் தான் சும்மா இருப்பது என்று மீண்டும் திரைத்துறைக்கு ரீ-விசிட் அடித்தார். ஆனால் இம்முறை கதாநாயகியாகி அல்ல! குத்து பாடல்களில் ஆடும் ஐட்டம் டான்சராக.
2009ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படத்தில் “குத்துவிளக்கு”என்ற பாடலுக்கு குத்து நடனம் ஆடி மீண்டும் ரசிகர்களை கவர ஆரம்பித்தார். “இந்தியன் படத்தில் நடித்த கஸ்தூரியா இது?” என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். என்ன தான் ரசிகர்கள் வாயை பிளந்தாலும் கஸ்தூரிக்கு பட வாய்ப்புகள் வரவே இல்லை. இந்நிலையில் திரைத்துறையை விட்டு டிவிட்டரில் குதித்தார் கஸ்தூரி. டிவிட்டரில் திருமாவளவனை வம்பிழுப்பது, எந்த பிரச்னையானாலும் அசால்டாக தலையிட்டு அறிவுரை கூறுவது, யார் சண்டை போட்டாலும் நடுவராக செயல் படுவது, முக்கியமாக அஜித் விஜய் ரசிகர்களை வாட்டி எடுப்பது, பின்பு அவர்களால் வாட்டி வதைக்கப்படுவது என்று தன்னை பிஸியாக வைத்து கொண்டுள்ளார் கஸ்தூரி. இந்நிலையில் ஒரு படி மேலே சென்று தமிழ்நாடு அரசை வம்பிழுக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “நாலாம் தேதியிலிருந்து தமிழ்நாட்டு குடிமகன்கள் அத்தனை பேருக்கும் பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரில அவசர வேலை வரும். பார்டர் பிசினஸ் ஓஹோன்னு களைகட்ட போவுது. இப்போதுதான் தமிழன் மது இல்லாம வாழ பழகுறான். இந்நேரத்தில் அரசு இப்பிடி சாராயத்தை அவுத்து விட்டதை வன்மையா கண்டிக்கிறேன்”, என்று பொங்கியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கஸ்தூரியை கடுமையாக சாடியும், கிண்டல் செய்து வருகின்றனர்.