ஊரடங்கு மக்களைத் தங்கள் இடத்திலேயே அடைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி வீட்டிலேயே தங்கியிருப்பதனால் மட்டுமே ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்நிலையில், நாம் விரும்பும் பிரபலங்கள் பலரும் தங்கள் நேரத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
பலர் நடனமாடுவதும், சமைப்பதும், பாடுவதும் உடற்பயிற்சி செய்வதும், நினைவுகளைப் புரட்டிப் பார்த்து பழைய புகைப்படங்களை வெளியிடுவதும், யோகா பயிற்சி செய்வது, ஆன்லைன் சவால்களைச் செய்வதுமாய் இருக்க, ஒரு இளம் நடிகை இதற்கு பதிலாக விவசாயத்தை முயற்சிக்கத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பிரபல நடிகரும்-தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது விவசாய நிலத்தில் அவரது மருமகளுடன் சேர்ந்து பயிர் நடவு செய்வதுபோல் இடம்பெற்றுள்ளது. “நான் செய்த மிக நன்றியுள்ள காரியங்களில் இதுவும் ஒன்று! கைவினைக் கற்றல், இந்த நேரத்தில் மேலும் ஒரு படி. இதற்காக த்ரியா குழந்தையை இழுக்க வேண்டியிருந்தது” என்று வீடியோவுக்கு அவர் தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை அவரது அப்பா அருண் பாண்டியன் படம்பிடித்ததாகவும், “(மீண்டும், இது எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டுப் பகுதிக்குள் உள்ளது, இது ஒரு பொது பகுதி அல்ல)” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் அவர், தனது நிலத்தில் ஒரு டிராக்டரை ஓட்டிய வீடியோவைப் பகிர்ந்து அசத்தினார்.கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாள ஹிட் திரைப்படமான ‘ஹெலன்’ தமிழ் ரீம்மேக் அவரது இரண்டாவது படமாக அமையவுள்ளது. இதில் அருண் பாண்டியன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.