இணையதளம் முழுவதும் எங்கு திரும்பினாலும் வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை பற்றிதான் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இடையில் நடந்த விவாதத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் வனிதா திட்டி பேசியிருந்தார்.
இவர்களின் இந்த விவாதத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனை ஆதரித்து தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை கஸ்தூரி போன்றோர் தங்கள் கருத்துக்களை வீடியோ பதிவுகளாக வெளியிட்டு வந்தார்கள்அதைத்தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் அவர் இந்த பிரச்சனையில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நியாயம் பெற்றுத் தரக்கோரி தான்தான் கேட்டதாகவும், அதனால்தான் இப்படி ஒரு நிலைமைக்கு லட்சுமிராமகிருஷ்ணன் உட்படுத்தப்பட்டார் என்றும், அதை நினைத்து தான் மிகவும் வருந்துவதாகவும், அதனால் தன்னை மன்னித்து விடும் படியும் எலிசபெத் ஹெலன் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் இந்த பிரச்சினை பற்றி பேசியே நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வனிதா போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனை ஆதரித்து நடிகை ஊர்வசியின் தாய் விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நான்காவது மகள் போன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊர்வசியின் தாய் விஜயலட்சுமி கூறியுள்ளதாவது ” நான் விஜயலட்சுமி என்னை பல பேருக்கு தெரியாது. ஆனால் என் 3 மகள்களை அனைவருக்கும் தெரியும். நான் நடிகைகள் கலாரஞ்சனி, கல்பனா மற்றும் ஊர்வசி அவர்களது தாய். ஒரு டிவி ஷோ எப்படி இருக்க வேண்டும் என்று நான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். சில எபிசோடுகளை பார்க்கும்போது எனக்கே கோபம் வரும், ஆனால் அதில் முகத்தில் புன்சிரிப்புடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவ்வளவு பொறுமையுடன் பேசியிருப்பார். நான் அவரிடத்தில் இருந்திருந்தால் சில நேரங்களில் கோபப்பட்டு கண்டிப்பாக நிகழ்ச்சியில் இருந்து விலகியிருப்பேன். ஆனால் அதை லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வளவு பொறுமையாக தீர்த்து வைத்திருப்பார். நான் அவரது பெரிய ஃபேன். நான் அவரை எனது நான்காவது மகளாக தான் நினைக்கிறேன். இதுவரை அவரை நான் நேரில் சந்தித்ததே இல்லை. கடவுள் அவருக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பார்” என்றிருக்கிறார்.
இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் ” நான் ஊர்வசி மேமின் பெரிய ஃபேன். ஆனால் இதை நான் எதிர்பார்க்கவில்லை. என் தாய் என்னை விட்டுப் பிரியவில்லை, இந்த அம்மா வடிவில் எனக்கு ஆதரவளித்திருக்கிறார்” என்று உணர்ச்சிவசமாக பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/LakshmyRamki/status/1286869322955030534?s=19
இதற்கிடையில் பீட்டர் பாலின் பிறந்தநாளை கொண்டாடி வனிதா வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி லட்சுமிராமகிருஷ்ணன் ” நாம் சிலரது விஷயத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். எவ்வளவு கூறினாலும் சிலருக்கு புரியாது. சட்டப்படி மனைவி இருக்கும் போது இப்படி புகைப்படங்களை வெளியிடுவது நல்லதல்ல. இதைப் பற்றி நம் கருத்துக்கள் வெளியிடுவது அல்லது விவாதிப்பது வீண். நம் கருத்துக்களை நாம் பெயர்களை வெளியிடாமல் இனி குறிப்பிடலாம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Attachments area