நடிகை வாணி போஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • October 31, 2022 / 10:50 AM IST

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் 2020-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஓ மை கடவுளே, லாக்கப்’, கடந்த ஆண்டு (2021) ரிலீஸான ‘மலேஷியா டு அம்னீஷியா, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஆகிய நான்கு தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

இதில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தயாரித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், லவ், ஊர் குருவி, ரேக்ளா, ஆர்யன்’ என எட்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி வாணி போஜனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus