இதுவரை யாரும் பார்த்திராத வர்ஷா பொல்லம்மாவின் அரிய புகைப்பட தொகுப்பு!
July 11, 2021 / 02:34 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘சதுரன்’ தான். இந்த படத்தை இயக்குநர் ராஜீவ் பிரசாத் இயக்க, ஹீரோவாக ராஜாஜி நடித்திருந்தார். இதன் பிறகு நடித்த ‘வெற்றிவேல்’ படம் தான் வர்ஷாவின் நடிப்புக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
‘வெற்றிவேல்’ படத்துக்கு பிறகு நடிகை வர்ஷா பொல்லம்மாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், 96, சீமத்துரை, பெட்டிக்கடை, பிகில்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இதில் ‘பிகில்’ படத்தில் ‘காயத்ரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் வர்ஷா பொல்லம்மா.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை வர்ஷா பொல்லம்மாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…