வடிவேலுடன் நடிக்க மறுத்த நடிகை !

நடிகர் வடிவேல் கதாநாயகனாக நடிக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார் . இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் , மருதமலை , கத்தி சண்டை போன்ற படங்களில் வடிவேலு ஏற்கனவே நடித்துள்ளார் . இவர்கள் கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்தும் வெகுவாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டது . இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது . இந்த படத்தின் ஷிவானி மற்றும் ஷிவாங்கி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . மேலும் பிரபு தேவா மாஸ்டர் ஒரு பாடல் காட்சிக்கு நடனம் இயக்கி உள்ளார் .

இந்நிலையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாகி பிறகு வெள்ளித்திரை கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர் .இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் . அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹாஸ்டல். வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க அணுகியுள்ளனர் படக்குழு . ஆனால் நடிகை பிரியா பவானி ஷங்கர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதனால் வடிவேலு தரப்பிற்கு மனக்கஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய போகிறது .இந்த படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.