மாவீரன் படத்தில் அதிதி ஷங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

  • August 9, 2022 / 04:53 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது .

இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .விருமன் படத்தின் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கும் நடிகை அதிதி ஷங்கருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது . முதல் படம் வெளியாவதற்குள் இரண்டாவது பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் நடிக்க இருக்கிறார் அதிதி . இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது .இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு அதிதி 25 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus