சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக அதிதி ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?
July 19, 2023 / 06:49 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மாவீரன்’ படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் ஓவருக்கு முன்னணி நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.
இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகை அதிதி ஷங்கர் ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.