விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் அபிஷேக் ராஜா. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி ஆனார்.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி ஆனார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். நேற்றைய பிக் பாஸ் ஷோவில் இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது, இமான் அண்ணாச்சி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வணக்கம், 70 நாட்கள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எனக்கு ஆதரவளித்து வாக்களித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி” என்று கூறியுள்ளார். மேலும், ‘பிக் பாஸ் 5’யின் இன்னொரு போட்டியாளரான ஐக்கி பெர்ரியை நேரில் சந்தித்து பேசிய வீடியோவையும் இமான் அண்ணாச்சி ஷேரிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.