சூப்பர் ஹிட்டான ‘ஜெயிலர்’… நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

  • August 18, 2023 / 10:41 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் தொடங்கிய முதல் படமான ‘வேட்டை மன்னன்’ டிராப்பானாலும், அடுத்ததாக இவர் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘டாக்டர்’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. கடந்த வாரம் நெல்சன் இயக்கிய புதிய படமான ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நெல்சன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். மிக விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus