Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

  • December 26, 2023 / 05:27 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லீக்கு வழங்கியது.

‘தெறி’ ஹிட்டானதும் அட்லீக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்துக்கு பிறகு அட்லீ இயக்கிய படம் ‘ஜவான்’. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த ஆண்டு (2023) ரிலீஸான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது, அட்லீ இயக்கப்போகும் புதிய படத்தில் டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags