சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் கொண்டாட்டம் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் கௌதம் மேனன் வீடியோ கால் மூலமாக குறும்படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார்.
‘கார்த்தி டயல் செய்த எண்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ள இந்த குறும்படம் வெகு விரைவில் வெளியாக உள்ளது. அதன் முன்னோட்டமாக டீசர் வெளியாகி இருந்தது.
ஆனால் டீசரில் திரிஷா மட்டுமே இடம் பெற்றிருந்தார். கார்த்திக் என்ற பெயரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசையும் படத்தில் இடம் பெற்றிருந்ததால் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீடு தான் என ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.
ஆனாலும் இதில் சிம்பு இடம் பெறாததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்து இருந்தனர். மேலும் கௌதம் மேனன் சிம்பு இருக்காரா? இல்லையா? என்பதை சஸ்பென்சாக வைத்து வருகிறார்.இதில் சிம்பு நடித்து இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் விரைவில் கொண்டாட்டம் இருக்கு என உற்சாகமடைந்துள்ளனர்.