Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

  • November 28, 2023 / 12:01 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ மற்றும் SU.அருண்குமார் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள், ட்ரெய்லர்கள் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. முதலில் இப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாவதாக இருந்தது.

பின், கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் “Sorry. நான் நிறைய முயற்சி செய்தும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இன்னும் சில நாட்களில் இப்படம் கண்டிப்பாக வெளியாகும்” என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த படம் வருகிற நவம்பர் 30 அல்லது டிசம்பர் 1-ஆம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, இப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus