நடந்து முடிந்த அக்னிசிறகுகள் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

  • November 16, 2020 / 10:46 PM IST

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், எடிட்டர், பாடல் எழுத்தாளர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு என்று தனி பாணி வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ஏற்கனவே கூறியிருந்தவாறு தனது புகழ்பெற்ற படமான பிச்சைக்காரன் படத்தின் சிக்குவலான “பிச்சைக்காரன் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

2012ஆம் ஆண்டு ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்த விஜய் ஆண்டனி, 2005 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான “சுக்கிரன்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இசையமைப்பாளராக பிரபலமான பின் விஜய் ஆண்டனி நடிக்க தொடங்கி, பின்பு தயாரிப்பாளரானார்‌. இவர் நடிப்பில் வெளியான முதல் படமான “நான்” படத்திலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் இவரும் அருண் விஜய்யும் இணைந்து நவீன் இயக்கத்தில் “அக்னிசிறகுகள்” என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்கள் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று உள்ளதாக அறிவித்துள்ளார்கள். விரைவில் இந்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.