முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வந்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ண குமார், காளி வெங்கட், அச்யூத் குமார், ஞானசம்பந்தம், வினோதினி வைத்யநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆர்.எஸ்.சிவாஜி, ‘பூ’ ராமு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று OTT-யில் ரிலீஸானது. இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்தை ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
Sorarai potru ..Heavily fictionalised but outstanding in capturing the true essence of the story of my book. A real roller coaster.
Yes watched it last night. Couldn’t help laughing and crying on many family scenes that brought memories.— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020
Dramatised but true to the undying spirit of triumph of hope against struggles and tribulations of an entrepreneur with disadvantaged rural background over overwhelming odds.
— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020
The portrayal of my wife Bhargavi by Aparna was very well etched out , of a woman who had her own mind , strong but soft , feisty and fearless and an inspiration to rural women especially who are equal and can be entrepreneurs in their own right.
— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020
And Suriya was powerful and carried off the part of an entrepreneur obsessed to the point of madness that makes dreams come true. A timely and great uplifting story in these times of gloom
— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020
And kudos and big salute to Director Sudha , to have balanced very deftly a male centric story lead by Suriya by portraying a wife acted by Aparna who was a powerful counter balance in an inspiring and heartwarming way
— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020