கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளார்கள். மேலும் இந்த நேரத்தை அதிகமாக ரிலாக்ஷ் செய்வதற்கு அனைவரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
குறிப்பாக சினிமா துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. வெளிவரவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் லாக்டவுன் முடிந்ததும் வெளியிடுவதற்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருப்பதால் புகைப் படங்களை வெளியிடுவது, வீடியோக்களை வெளியிடுவது மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது என்று தங்களது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
இணையதளங்களில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருவதால் ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா யோகா செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த லாக்டவுனில் உடலையும் மனதையும் அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள யோகா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இந்த புகைப்படங்களை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது” இந்த லாக்டவுனில் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருப்பதால் மனசோர்வும் உடல் சோர்வும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மனச்சோர்விலிருந்து விடுபடுவது மிகவும் முக்கியம், அதனால்தான் ஒவ்வொரு புதன்கிழமையும் வொர்க் அவுட் டிப்ஸ் பதிவிட்டு வருகிறேன். மேலும் சத்தான உணவுகள் குறித்த விபரங்களும், யோகா விபரங்களையும் பதிவிடுகிறேன்” என்றிருக்கிறார்.
இவரைப்போலவே நடிகை சமந்தா வெளியிட்ட யோகா புகைப்படங்கள் வைரலாகி வந்தது.இவரின் யோகா போஸ் புகைப்படங்களை வைத்து காமெடி மீம்ஸ்களை தயாரித்து வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.