நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராய் !

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் . தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களின் கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

 

Share.