தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படம் இன்று சில வாரங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான விமர்சனத்தை பெற்றது .
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படங்களாக கருதப்படுவது காக்கா முட்டை மற்றும் எங்க வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் . இது இரண்டு படங்களில் நடித்தது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பேசி உள்ளார் . அதில் ” எங்க வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்க வேண்டாம் என்று பலர் என்னிடம் கூறினார்கள் , ஹீரோயினாக பாட்டு , நடனம் என்று கமர்சியலாக இருக்கும் என்றனர் ஆனால் நாள் துணிவாக நான் அந்த முடிவை எடுத்தேன் அது மாதிரி காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் போதும் என்னை அம்மா பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் அபப்டி நடித்தால் அம்மா கதாபாத்திரம் மட்டும் தொடர்ச்சியாக நடிக்க நேரிடும் என்றார்கள் ஆனால் எனது அண்ணன் மணிகண்டன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் எனக்கு தெய்ரியம் தந்தார்கள் பின்பு நான் காக்கா முட்டை படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார் .