களைக்கட்டும் பிக் பாஸ் வீடு ! என்ன காரணம் தெரியுமா ?
December 28, 2022 / 03:36 PM IST
|Follow Us
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இந்நிலையில் 79 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் அமுதவாணன் .
இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது . ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் இது தான் . போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் . அந்த வகையில் நேற்று நடைப்பெற்ற பிரீஸ் டாஸ்கில் மைனாவின் கணவர் , அமுதவானின் மனைவி மற்றும் குழந்தைகள் , ஷிவினின் தோழி மற்றும் தோழன் பங்கேற்றுள்ளனர் .
இன்று நடக்க உள்ள பிரீஸ் டஸ்கில் ரட்சித்தாவின் அம்மா மற்றும் மணிகண்டனின் அம்மா , மனைவி , ஆகியோரும் மணிகண்டனின் தங்கை மற்றும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று உள்ளனர் .