சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா ராஜேஷ்

  • February 20, 2023 / 07:53 PM IST

தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படம் இன்று சில வாரங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் கால் டாக்சி டிரைவராக நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான விமர்சனத்தை பெற்றது .

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த மாதம் 3 -ஆம் தேதி ரன் பேபி ரன் மற்றும் கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய இரண்டு படம் வெளியாகி இருந்தது .வெளியான இரண்டு படங்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . இதனால் பாக்ஸ் ஆஃபீசிலும் இரண்டு படங்களும் சேர்த்தே 10 லட்சம் தான் வசூலித்து உள்ளது என்று கூறப்படுகிறது .


இந்நிலையில் கடந்து இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்று கூறப்படுகிறது . தனது அடுத்த படத்திற்கு சம்பளமாக 1.5 கோடி ரூபாய் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus