3 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • April 17, 2023 / 05:46 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் SG.சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி ப்ரியா, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தற்போது, கடந்த 3 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.71.21 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus