ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸாக நடித்துள்ள ‘திட்டம் இரண்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 30, 2021 / 12:14 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ‘பூமிகா, திட்டம் இரண்டு, மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், தருவ நட்சத்திரம்’, தெலுங்கில் ‘டக் ஜெகதீஷ், ரிபப்ளிக், ‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக் என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘திட்டம் இரண்டு’ என்ற த்ரில்லர் ஜானர் படம் இன்று (ஜூலை 30-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’வில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸாக வலம் வருகிறாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாவெல் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், சுபாஷ் செல்வம், அனன்யா ராம்பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது, இந்த படத்தை ‘சோனி லைவ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus