தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர்.
இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான ‘லால் சலாம்’-ன் ஷூட்டிங் முடிவடைந்தது. இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறார்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.