’தே தே பியார் தே’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை நடிகர் அஜய் தேவ்கன் பகிர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம், ’தே தே ப்யார் தே’. ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இப்படம் வெளிவந்து ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், இது குறித்த நினைவுகளை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜய் தேவ்கன் பகிர்ந்துள்ளார்.
51 வயது நிரம்பிய அஜய், படத்தின் நடிகைகள் தபூ, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை டேக் செய்து மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.” வழக்கத்திற்கு மாறான காதல் உறவு குறித்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி பேசிய இந்தத் திரைப்படம், குடும்பத்திற்கே என்றைக்கும் முதலிடம் என்பதையும் உணர்த்தியது” எனக் குறிப்பிட்டு படம் குறித்து அஜய் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அகில் அலி இயக்கிய இப்படத்தில், 50 வயது நிரம்பிய விவாகரத்து பெற்ற ஆண் ஒருவர், 26 வயது நிரம்பிய பெண்ணைக் காதலிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதில் தபூ, அஜயின் முதல் மனைவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
தன் மகள் வயதுள்ள பெண்ணுடன் காதலில் விழும் நபரைப் பற்றிய இந்தத் திரைப்படம், வெளிவந்தபோது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.