அடேங்கப்பா… 2 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • April 1, 2023 / 07:34 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நரேன், அர்ஜுன் தாஸ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார்.

இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

இந்த படம் ஹிந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நேற்று முன் தினம் (மார்ச் 30-ஆம் தேதி) 3D-யில் ரிலீஸானது. இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கியதுடன், அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அமலா பால், தபு, சஞ்சய் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.27.20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus