விஜயகாந்துக்கு பதிலாக நடித்த அஜித்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 20, 2022 / 11:58 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார்.

அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது, விஜயகாந்த் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2001-யில் ரிலீஸான தமிழ் படம் ‘சிட்டிசன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரவண சுப்பையா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக அஜித் டித்திருந்தார். ஆனால், சரவண சுப்பையா இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென விஜயகாந்தை அணுகினாராம். பின், சில காரணங்களால் விஜயகாந்த் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus