முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்காக அஜித்துக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.