அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் மகிழ் திருமேனி!

  • May 8, 2023 / 06:33 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜூன் மாதத்தில் இதன் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளப்போகும் அஜித் இந்த படத்துக்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். 70 நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி ப்ளான் போட்டிருக்கிறார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus