முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.
கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி சில நாட்கள் தொடர்ந்து நடந்தது. விரைவில் புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. சமீபத்தில், அஜித்தின் 61-வது படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டரில் “இயக்குநர் சுதா கொங்கரா இந்த ஸ்க்ரிப்ட் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். இது ஒரு செம்ம ஆக்ஷன் ஸ்க்ரிப்ட். நடந்ததுன்னா செமையா இருக்கும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அஜித்தின் ரசிகர் ஒருவர் சுதா கொங்கரா படத்துக்கு ‘செங்கிஸ் கான்’ என்ற டைட்டிலில் ஒரு போஸ்டரை டிசைன் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சூப்பராக இருக்கும் இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
https://twitter.com/TrichyThalaFans/status/1316234828778332161