ட்விட்டரில் அந்த ஹேஸ்டேக்கை உருவாக்கி சண்டை போட்டுக்கொள்ளும் ‘தல, தளபதி’ ரசிகர்கள்!

  • November 22, 2020 / 12:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகர் ‘தல’ அஜித். அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்தின் அடுத்த படமான ‘தல 61’-ஐ பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் – அஜித் நண்பர்களாக பழகி வந்தாலும், இவர்களது ரசிகர்கள் மோதிக்கொள்வது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் #CrossBreedAjith என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள். இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் #CrossGenderVijayFans என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய துவங்கி விட்டார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.