அஜித்தின் மகள் அனோஷ்காவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

  • November 10, 2021 / 10:10 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse மற்றும் ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse மற்றும் ‘நாங்க வேற மாரி’ என்ற பாடல் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், அஜித்தின் மகள் அனோஷ்காவின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus