முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
அஜித்தின் ரசிகர்கள் பல மாதங்களாக ‘வலிமை’ படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) சென்னைக்கு வந்த பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் அஜித் ரசிகர்கள் “ஐயா வலிமை அப்டேட் கொடுங்க” என்று கேட்டதுடன் கையில் ஒரு போர்டும் வைத்திருந்தனர். இந்த சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
This is Pure Crazeeeeeee 🔥
Finally Fans asking #ValimaiUpdate To Honourable PM @narendramodi when he Visited Chennai Yesterday 😊
The Most Wanted News and Talk of the Town is THALA AJITHs VALIMAI Movie Update’s
Hope it strikes Us Very Soon 🤗#Valimai pic.twitter.com/U7o9WpvIzN
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 15, 2021