ஆட்டோவில் பயணம் செய்த அஜித்… இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ!

  • March 19, 2021 / 12:01 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். சமீபத்தில், நடிகர் ‘தல’ அஜித் 46-வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களை வென்றார். தற்போது, அஜித் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு வீடியோ ரிலீஸாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus