தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இப்போது இவர் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, லால் சலாம், இடம் பொருள் ஏவல், ஆர்யன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “‘மிக்ஜாம்’ புயல் காரணத்தினால் சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் காரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மின்சாரம், மொபைல் சிக்னல், WIFI எதுவுமே இல்லை. எனக்கும் இந்த ஏரியாவில் உள்ள மக்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு சில ஸ்டில்ஸை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அதே ஏரியாவில் குடியிருக்கும் மக்கள் சிலரை மீட்டனர். பின், இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் அஜித், விஷ்ணு மற்றும் அமீர் கானை நேரில் சந்தித்து பேசியதுடன், அந்த ஏரியா மக்களுக்கு போக்குவரத்து வசதி செய்து உதவியதாக தகவல் கிடைத்துள்ளது.
More than 30 people wer taken out from our villa community with many old people as well
Thanks to the firemen who helped us all and are helping other people in karapakkam…We gave them some food that we had..
Please help these people as well ..they are workin non stop n… https://t.co/1FmJoGSPzV
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 5, 2023
After gettting to know our situation through a common friend,
The ever helpful Ajith Sir came to check in on us and helped with travel arrangements for our villa community members…Love you Ajith Sir! https://t.co/GaAHgTOuAX pic.twitter.com/j8Tt02ynl2— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 5, 2023
— Gutta Jwala (@Guttajwala) December 5, 2023