முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்துள்ள புதிய படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளனர். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில், அஜித் லண்டனுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு விமான நிலையத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
More latest pics of Ajith sir from London ❤️ #Ajithkumar #Thunivu #AK62 pic.twitter.com/K6JVqSn2gk
— TRENDS AJITH (@TrendsAjith) January 26, 2023