அஜித் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அஜித் படத்தின் கதை பற்றி பேசி இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.அஜித் நடித்த வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சி அஜித் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.

இந்த காரணத்தால் இது போல் ஒரு வித்தியாசமான கதையில் அஜித்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த போகிறேன் என்றும் அஜித் 62 வது படத்தை வித்தியாசமாக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிடிப்பது போல் எடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கு உள்ளது . விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் நிறைய அரசியல் உள்ளதால் அதனை மற்ற சொல்லி இருக்கிறார் அஜித் . இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது படத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறார் .

Share.