மகன் ஆத்விக்குடன் அஜித் – ஷாலினி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
March 15, 2023 / 01:18 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில், அஜித் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் இருக்கும் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus