Billa : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • February 17, 2024 / 11:20 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘விடாமுயற்சி’-க்கு பிறகு அஜித்தின் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அஜித் 2007-யில் நடித்த ‘பில்லா’ படத்தை வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்கி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘பில்லா’ படத்தில் முக்கிய ரோல்களில் பிரபு, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, நமீதா, ரகுமான், சந்தானம், ஆதித்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus